Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே எச்சரிக்கை.. அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியம்.. கொரோனா உச்சத்தை அடையும் என பகீர்.

அதே போல பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் குழு ஒன்று வரும் சில வாரங்களில் இந்தியாவுக்கு மிகவும் கடினமான வாரங்களாக இருக்கும் என்றும்  கணித்துள்ளது. இந்த குழுவின் கூற்றுப்படி நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் தற்போது நிலையிலேயே நீடித்தால் ஜூன் 11 க்குள் கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடக்கும் என எச்சரித்துள்ளனது.

People of Tamil Nadu are warned .. The next 3 weeks are very important .. Corona as the corona reaches its peak
Author
Chennai, First Published May 7, 2021, 3:38 PM IST

மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா உச்சத்தை அடையும் என்றும், அது ஜூன் இறுதிக்குள் நாளொன்றுக்கு 20 ஆயிரமாக குறையும் என்றும், கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 நாட்டில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 15 நாட்களில் இந்தியாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 4.12 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் ஆலோசகர் வெளியிட்டுள்ள கூற்றின்படி கொரோனா மே மாதத்தில் இரண்டாவது உச்சத்தை அடைந்துள்ளது. இம்மாத நடுப்பகுதியில் அது காணப்படும். ஜூன் இறுதிக்குள் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 20,000 ஆக குறையும் எனக் கூறியுள்ளார். 

People of Tamil Nadu are warned .. The next 3 weeks are very important .. Corona as the corona reaches its peak

அதேபோல ஐதராபாத், கான்பூர் ஐஐடி பேராசிரியர்களின் ஆய்வு, உலக அளவில் கண்காணிப்புகள் அடிப்படையில் பார்க்கும்போது மே 14 தேதியிலிருந்து 18-ந்தேதிக்குள் 3லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் வரை பரவல் இருக்கலாம், அது இரண்டாவது அலையின் உச்சமாக இருக்கலாம், பின்னர் அது படிப்படியாக குறைந்துவிடும் என்று அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே அடுத்த நிலையில் உள்ள பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளது.  குறிப்பாக இந்த மாநிலங்களில் வரும் வாரங்களில் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதே அதற்கு காரணம். 

People of Tamil Nadu are warned .. The next 3 weeks are very important .. Corona as the corona reaches its peak

அதே போல பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் குழு ஒன்று வரும் சில வாரங்களில் இந்தியாவுக்கு மிகவும் கடினமான வாரங்களாக இருக்கும் என்றும்  கணித்துள்ளது. இந்த குழுவின் கூற்றுப்படி நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் தற்போது நிலையிலேயே நீடித்தால் ஜூன் 11 க்குள் கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடக்கும் என எச்சரித்துள்ளனது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.அதேபோல் தொடர்ந்து 15வது  நாட்களாக நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல இந்தியாவில் புதிய வகை வைரஸ்கள் பரவுவதே தற்போதைய மாற்றத்தின் உயர்வுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நொய்டாவின் கைலாஷ் மருத்துவமனையில் மருத்துவர் அனுராதா மிட்டல், இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பின்னரும்கூட தங்களது மருத்துவமனையில் 50க்கும் அதிகமான மருத்துவர்கள் கொரோனா பாசிட்டிவான ரிசல்ட் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு புதிய வகை வைரஸ் பரவுகின்றன இத்தகைய சூழலில் உலகளவில் வரும் காலங்களில் கொரோனா  நீடிக்கலாம் என அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios