விடுமுறை நாட்களிலும் விரைவு ரயில் தேவை - தாம்பரத்தில் ரயில் மறியல்

சென்னை புறநகர் பயணிகளுக்கான ரயில் சேவையில் வாரந்திர விடுமுறை நாட்களில் விரைவு ரயில்கள் யாவும் நிறுத்தப்படும் ரயில் சேவையும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை என்றே இருக்கும். இதனை எதிர்த்து பயணிகள் இன்று திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டனர் இதில் 300 க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஒருமணி நேரத்தில் இது ஆயிரம் பேராக மாறியது.

ரயில்வே உயர் அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொல்லியதனால் மக்கள் யாவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒருமணி நேரம் தாமதமானது அன்றாட பணிகளுக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.