பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலை இல்லாத திண்டாட்டம் என பல குற்றசாட்டை பாஜக மீது வைத்தது காங்கிரஸ். இதற்கிடையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீயாய் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. இதற்காக மெகா கூட்டணி எல்லாம் 

22 கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்து பாஜக வை ஆட்சியில் இருந்து வெளியேற செய்வோம் என முழு முயற்சியில் உள்ளது காங்கிரஸ். திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என புகழாரம் சூட்டினார். 

இதெல்லாம் பார்க்கும் போது அடுத்து கண்டிப்பாக காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுக்கே வந்திருந்தனர் பெரும்பாலானோர். ஆனால் இதற்கிடையில் காஷ்மீர் மாநில புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடியும், சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக திரும்பி உள்ள பாஜக அரசை கண்டும், மோடியின் செல்வாக்கும் பாஜகவிற்கு பெரும் வர பிரசாதமாக அமைந்து விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

இந்த நிலையில் மெகா கூட்டணி குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சொன்னது போலவே நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தியுள்ளது. காரணம், தேர்தலில் இரு கட்சிகளும் அதாவது ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்து உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் ஆம்ஆத்மி கட்சி டெல்லியின் 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து திரிணாமூல் காங்கிரசுடன் புரிந்துணர்வை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

நிலைமை இப்படி இருக்க,அவர்களை ஓரணியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ராகுல்காந்தியை சரத்பவார், சந்திரபாபு ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றே விமர்சனம் கிளம்பி உள்ளது.