MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு

CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு

CBSE Language Policy : சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கை குறித்த அறிவிப்புக்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : May 26 2026, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை
Image Credit : x

மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை

தேசிய கல்விக் கொள்கை - 2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம் - 2023 ஆகியவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கல்வித் திட்டம் கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், மூன்றாவது மொழியாக ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, இந்த மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அண்ணாமலையின் கண்டனம்
Image Credit : our own

அண்ணாமலையின் கண்டனம்

சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் அறிவிப்புக்குத் கண்டனம் தெரிவித்து, தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அண்ணாமலை, கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தைச் சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள இது உதவும் என்பதால், அந்த முடிவை நான் வரவேற்றேன்.

ஆனால், அந்த அறிவிப்பில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கும் திட்டம், இன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

34
முந்தைய அறிவிப்பை மீறிய சிபிஎஸ்இ
Image Credit : our own

முந்தைய அறிவிப்பை மீறிய சிபிஎஸ்இ

இப்படியிருக்க, கடந்த மே 15, 2026 அன்று சிபிஎஸ்இ அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், தங்களது முந்தைய அறிவிப்பை மீறி, நடப்பு (2026-27) கல்வியாண்டிலிருந்தே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்தத் திடீர் மாற்றம் அனைத்து பெற்றோர்களுக்கும், குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மாணவர்கள் ஏற்கனவே 6-ஆம் வகுப்பில் தங்களுக்குப் பிடித்த மொழியைத் தேர்வு செய்து படித்து வரும் நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பில் திடீரென மற்றொரு புதிய மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று திரு.அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

44
மனஅழுத்தம் ஏற்படும்
Image Credit : Getty

மனஅழுத்தம் ஏற்படும்

மிகவும் குறுகிய காலத்திற்குள் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது, குழந்தைகளுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இது அவர்களின் ஒட்டுமொத்தக் கல்வித் திறனையும், கற்றல் ஆர்வத்தையும் பெருமளவில் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சுற்றறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் திட்டத்தை, முன்பு திட்டமிட்டபடி 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிபிஎஸ்இ-யின் இந்தத் திடீர் உத்தரவு நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்பொழுது பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சி.பி.எஸ்.ஈ.
அண்ணாமலை பாஜக
பள்ளி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Recommended image2
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Recommended image3
TN Rain: அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்! தமிழகத்தில் வெளுக்கப்போகும் கன‌மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Related Stories
Recommended image1
தமிழகத்தில் எப்போதுமே இரு மொழிக் கொள்கைதான் ! இங்க ஹிந்திக்கு வேலையே இல்ல !! அதிரடி எடப்பாடி!!
Recommended image2
Now Playing
கரூர் டூ டெல்லி வரை..அண்ணாமலை கடந்து வந்த பாதை | BJP Annamalai Life Story
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved