நடிகர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சு குறித்து தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும், குறிப்பாக வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தால் அங்குள்ள இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் தெரிவித்தார்.


எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து  இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறி விமர்சனம் செய்த, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டுஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரை பெற்ற ஆற்காடு நகர போலீசார் அதன் மீது சி.எஸ்.ஆர் அடிப்படையில், புகாரை பதிவு செய்து அதன் நகலை பொதுமக்களிடம் அளித்தனர்.