பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 10 கிலோவில் வெள்ளி கவசம்..! இபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஓபிஎஸ்
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். ஆண்டு தோறும் வங்கி லாக்கரில் இருக்கும் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் வழங்குவார். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பு பின்னணி !
குருபூஜையில் ஓபிஎஸ்
மேலும் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும், 'வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்' என்று முழங்கியவரும்; தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும், அடித்தட்டு மக்களின் மேப்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை நாளான இன்று (30-10-2022) மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக,
திடீர் உடல்நலக்குறைவு... முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசுப்பொன் பயணம் ரத்து..!
வெள்ளி கவசம் வழங்கும் ஓபிஎஸ்
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசுப்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் திருமதி ந. காந்தி மீனாள் அம்மையார் அவர்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னிர்செல்வம் அவர்கள் வழங்கி மரியாதை செலுத்துவார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்: விண்ணை முட்டிய "அரோகரா ” கோஷம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு