3 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியுள்ளதால் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி கொல்கத்தாவின் ஆட்டம் காணத் தொடங்கி இருக்கிறது. 

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராயை கடந்த 2 ஆண்டுகளுக்கு தன் வசப்படுத்தியது பாஜக. இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 100 பேர் பாஜகவுக்கு தாவ உள்ளதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைய உள்ளதாக கூறப்பட்டது. அடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது 40 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தம்முடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி அதிர்ச்சியூட்டினார்.

மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து 18 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. இதன் பின்னர் 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என மிரட்டியது பாஜக. இந்நிலையில் முகுல் ராயின் மகன் உட்பட 3 திரிணாமுல் எம்,எல்..ஏக்கள் டெல்லி சென்றனர். முகுல் ராய்தான் இவர்களை அழைத்துச் சென்றார். டெல்லியில் இன்று மாலை பாஜகவில் 3 எம்.எல்.ஏ.க்களும் இணைந்தனர். இவர்களுடன் 60 திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்களும் பாஜகவும் இணைந்தனர்.

இதனால் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கி உள்ளது.