கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து காத்திருக்கும் அதிமுக... கண்டுகொள்ளதாக பாமக, தேமுதிக- அதிர்ச்சியில் எடப்பாடி
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கவுள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில அதிமுகவும், திமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை குழுவை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. திமுக இன்று முதல் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அதிமுகவானது தங்களது கூட்டணியில் எந்த எந்த கட்சி வரும் என தெரியாமல் உள்ளது. தற்போது வரை எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி கதவை திறந்து வைத்திருக்கும் அதிமுக
பாஜகவுடன் கடந்த 5ஆண்டு காலமாக தொடர்ந்த கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் அணிக்கு இழுக்க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த கட்சிகள் எந்தவித நிலைப்பாடும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இதே போல பாஜகவும் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
எனவே அதிக தொகுதிகளை வழங்கும் அணிக்கே இரண்டு கட்சிகளும் செல்லும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுக சார்பாக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பங்கீட்டு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்
இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியதால் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்..!