மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று, நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விழாவில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் மோடி பங்கேற்க உள்ள விழாவில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள இருக்கிறார்.