மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர உள்ளார். அவரது வருகையின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பாஜக மாநாட்டிலும் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். விழா நடைபெறும் இடங்களை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன் மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பிரதமர் தந்துள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவிக்கே ஒரு திருப்புமுனையாகும் என்றார். 

மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும் என்ற வைகோ அறிவிப்புக்குப் பதிலளித்த அவர், தமிழின துரோகிகள் தான் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவார்கள் என்று பதிலளித்தார். 2014 காட்டிலும் வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.