வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கின்றனர். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க போவதில்லை என தினகரன் அடித்து கூறியுள்ளார். 

இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அமமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம் என்றார். ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2000 கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜெயலிலதா முதல்வராக இருந்த போது எதிர்த்த அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது. வரும் மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறலாம் என்ற கனவில் இருக்கின்றனர். அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைப்பது கூட கடினம் என்று பாமக தேமுதிக, பிஜேபி உள்ளிட்ட கூட்டணி டீல் பேசும் கட்சிகளுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு கொஞ்சம். கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர் என விமர்சனம் செய்துள்ளார்.