Asianet News TamilAsianet News Tamil

திமுக வேட்பாளர்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டாம்... அதிமுக போடும் மெகா பிளான்!

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக போட்டியிட ஒரு திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

parliamentary election...edappadi palanisami master plan
Author
Tamil Nadu, First Published Feb 9, 2019, 12:45 PM IST

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக போட்டியிட ஒரு திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் வரும் கருத்துக்கணிப்புகள் எல்லாம், திமுக வெற்றி பெறும் என்றே வந்துகொண்டிருக்கின்றன. இதைக் கண்டு பெரிதாக அலட்டிக்கொள்ளாததைப் போல அதிமுக வெளியே காட்டிக்கொண்டு வருகிறது. ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை என்றே தெரிகிறது. தேர்தலில் போட்டியிட அதிமுக வகுத்துவரும் சில திட்டங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. parliamentary election...edappadi palanisami master plan

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 முதல் 25 தொகுதிகள் வரை போட்டியிட திட்டம் போட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை என்றாலும், எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை சீட்டுகள், எந்தத் தொகுதிகள் தரலாம் என்பதுவரை திமுக முடிவு செய்து வைத்திருக்கிறது. அதிமுக கூட்டணி இன்னும் முழுமைய அடையாத நிலையில், திரைமறைவில் பேச்சுவாத்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. parliamentary election...edappadi palanisami master plan

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் அதிமுக வெற்றி பெற்றது பற்றிய பேச்சு அதிமுக மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வென்றதையும், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் போட்டியிட்ட  தொகுதிகளில் அதிமுகவே மிகப் பெரிய வெற்றி பெற்றதைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். 

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இது நடக்க வேண்டும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு தோதாக, திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக  போட்டியிட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிகின்றன.  திமுக கூட்டணி கட்சிகளை சுலபமாக ஓரங்கட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்றும் பேசப்பட்டிருக்கின்றன. parliamentary election...edappadi palanisami master plan

எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக முழுவீச்சோடு களமிறங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுகவில் தொகுதி பங்கீடுகளின் மூவ்களை அதிமுக மேலிடம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அதிமுக மேலிட வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios