Asianet News TamilAsianet News Tamil

என்னைப் பார்த்தா மக்களுக்கு பாவமாயிருக்குது..! நிச்சயம் ஜெயிக்க வைப்பாங்க... ஆ.ராசாவின் அட்ராசக்க சென்டிமெண்ட்..!

கடந்த எட்டு வருடங்களாகவே தி.மு.க.வுக்கு தேர்தல் அரசியலில் மிகப்பெரிய சரிவை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு 2ஜி விவகாரத்திற்கு உள்ளது. இந்த விவகாரத்தின் மையப்புள்ளி ஆ.ராசா.

Parliamentary election... A.raja Sentiment
Author
Tamil Nadu, First Published Apr 8, 2019, 2:53 PM IST

கடந்த எட்டு வருடங்களாகவே தி.மு.க.வுக்கு தேர்தல் அரசியலில் மிகப்பெரிய சரிவை உருவாக்கியதில் மிக முக்கிய பங்கு 2ஜி விவகாரத்திற்கு உள்ளது. இந்த விவகாரத்தின் மையப்புள்ளி ஆ.ராசா. தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரான இவரை ‘சர்வதேசத்தை மிரள வைத்த ஊழல்வாதி’ என்று எதிர்க்கட்சிகள் வெச்சு செஞ்சதன் விளைவை வெகுவாக அறுவடை செய்தது தி.மு.க. ஆனாலும் கருணாநிதியாகட்டும், ஸ்டாலினாகட்டும் ஆ.ராசாவை அரசியல் ரீதியில் விட்டுக் கொடுக்கவேயில்லை. Parliamentary election... A.raja Sentiment

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றம் இந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்தது. மேல்முறையீடு பரபரப்புகள் ஒருபுறமிருந்தாலும் கூட, தான் அக்கினிபிரவேசம் செய்து தனது பரிசுத்தத்தை நிரூபித்துவிட்டதாகவே மேடைகளில் முழங்குகிறார் ராசா. கடந்த 2014 தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு தோற்றவர், இதோ மீண்டும் அதே தொகுதியில் வந்து நிற்கிறார் வேட்பாளராய். இந்த முறை வென்றே தீருவேன்! என்று முழக்கமிடும் ஆ.ராசாவின் பொளேர் பேட்டியின் கலக்கல் ஹைலைட்ஸ் இதோ...

  Parliamentary election... A.raja Sentiment

* எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணியை பார்க்க கூடாது. எண்ணங்களின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியானது முரண்பாடுகளின் மொத்த தொகுப்பு.

* தே.மு.தி.க.வுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லையே. விஜயகாந்தின் உடல்நலத்தை, மனிதாபிமான அடிப்படையில் ஸ்டாலின் விசாரிக்க சென்றார். அது தவறாக சித்தரிக்கப்பட்டது. 

* ஈழபோரின் இறுதி நேரத்தில் காங்கிரஸ் அரசு, சர்வதேச அளவில் உரிய அழுத்தம் தரவில்லையே என வருத்தப்பட்டோம். அதனால் கூட்டணியை விட்டு வெளியேறினோம். ஆனால் இன்று இந்திய தேசத்துக்கே பெரிய நெருக்கடியையும், ஆபத்தையும் தரும் வகையில் மோடியின் மதவாதம் உலுக்குகிறது. அதனால்தன் கூட்டணி வைத்துள்ளோம். 

* உதயநிதியை சிலர் ரத்தவாரிசு அரசியல் என்கிறார்கள். அது தவறு. தன் தாத்தா, அப்பா பின்பற்றிய அரசியல் சித்தாந்தத்தை அவரும் பின்பற்றி நடக்கிறார். இது லட்சிய வாரிசு .

* என்னை இப்போது குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுபட்டவனாகதான் தேசம் கருதுகிறது. 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி, ‘வானளாவிய அளவிற்கு, பொய்யாக புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. மிகப்பெரிய ஊழல் நடந்ததாக, பொய் பிம்பத்தை நாட்டில் சிலர் ஏற்படுத்தி விட்டனர். அதை இந்த நீதிமன்றம் ஏற்க, சட்டத்தில் இடமில்லை.’ன்னு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

மக்களும் முழுமையாய் அதை புரிந்துள்ளனர். பொய் குற்றச்சாட்டுக்காக பதினைந்து மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த என்னை, பரிவும் பச்சாதாபமும், பாவமும் கலந்துதான் மக்கள் பார்க்கிறார்கள். - என்று பேசியிருக்கிறார். ஆ.ராசாவின் இந்த அடேங்கப்பா சென்டிமெண்டல் ஸ்டேட்மெண்டால் நொந்து கிடக்கும் அ.தி.மு.க. தரப்பு, அவர் மீதான பார்வையை அடித்து நொறுக்கிவிட்டு, நீலகிரி தொகுதியில் தாங்கள் முன்னேற அடித்தளம் போடுகிறது அதிதீவிரமாக.

Follow Us:
Download App:
  • android
  • ios