செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ படை திடீரென வெளியேறியது- காரணம் என்ன.?
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர். தங்களது பணியில் இருந்து விலக்கிக்கொண்டனர்.
மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கை இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று முன் தினம் செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை நேற்று அதிகாலை கைது செய்தது. அப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இருதய பகுதியில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
துணை ராணுவம் வாபஸ்
இதனையடுத்து அவரை மருத்துவமனையில் வந்து பார்த்த நீதிபதி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனையின் போது அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் செந்தில் பாலாஜி மருத்துவமனையிலேயே ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதால், தற்போது புழல் சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. புழல் சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி நேற்றிரவு கொண்டுவரப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று செந்தில்பாலாஜி தரப்பின் ஜாமீன் மீதான மனு, அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுக்களின் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சிக்கியது எப்படி.? காட்டி கொடுத்தது எது.? வெளியான தகவல்