Panneerselvam team will be split soon

ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசியோடு சண்டை போட்டுக்கொண்டு ஜெ.,சமாதிமுன்பு தியானமிருந்து புதிய அணி ஒன்றை தொடங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக-விலிருந்து பிரிந்தபோது அவரது அணிக்குப் பக்க பலமாக இருந்தவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அவர்களும் தற்போது அமைதியாகி விட்டார்கள். சசிகலா அணியிலிருந்து ஓ.பி.எஸ். அணிக்குத் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ண மூர்த்தி, மீண்டும் சசிகலா அணிக்கு வந்துள்ளாராம், தம்பித்துரையிடமும், பழனியப்பனிடமும், ஓ.பி.எஸ். அணியில் நடக்கும் கூத்துகளை சொல்லிச் சொல்லி சிரிக்கிறாராம்.

ஓ.பி.எஸ்.-க்கு பக்கபலமாகவும், மூளையாகவும் செயல்பட்டவர்கள், ஓ.பி.எஸ். குடும்பத்தார் செயல்பாடுகளின் சுயநலம் நிறைந்திருப்பதால், பலர் அமைதியாகி விட்டார்கள். முக்கிய பிரமுகர் ஒருவர் விரைவில் பாஜக-வில் ஐக்கியமாககுள்ளாராம். இதுமட்டுமல்ல பன்னீர் வாரிசு ஒருவர்தான், கர்நாடகாவில் மேகதாது அணைகட்டுவதற்கு மணல் சப்ளை செய்து வந்தார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவடத்திலிருந்து ஒரு லோடு மணல்கூட கர்நாடகாவுக்கு போகாமல் தடுத்து விட்டது எடப்பாடி அரசு.

இதனால் பல லாரிகள், ஜே.சி.பி, பல தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். மேகதாது அணைக்கட்டும் வேலைக்கு மணல் கேட்டு நச்சரிக்கத் துவங்கி விட்டார்கள் ஒப்பந்தகாரார்கள். அதனால்தான், சசிகலா அணியில் இணைவதற்குத் தந்தையைவிட வாரிசு வேகபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடியார் ஆர்வம் காட்டாததால் ஓ.பி.எஸ். அணி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாம்.

சசி குடும்பத்துடனான டமால் டுமீலுக்குப்பின் பன்னீர்செல்வம் அணிக்கு 12 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக கூறிவந்த இவருக்கு வேறு எம்.எல்.ஏ. அல்லது எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் என்று யாரும் வராததால் ஓபிஎஸ் அணி அப்செட்டாம்.

இது ஒருபக்கம் இருக்க அதிமுக தொண்டர்களின் பலத்தை முழுமையாக என்பக்கம் இழுத்துவிடுகிறேன் என்று சவால் விட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார் ஓபிஎஸ். தமக்கு சாதகமான இடங்களில் கூட்டம் கூட்டினார், திண்டுக்கல்லிலும் கூட்டம் நடத்தினர். 

மேலும், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பிறகு ஓபிஎஸ் நடவடிக்கைகள் தனித்தே உள்ளன என்றும், அவரும் கேபி முனுசாமியும் மட்டும்தான் ஆலோசனை நடத்துகிறார்கள் என்றும் நத்தம் டீம் பயங்கர கடுப்பில் உள்ளார்களாம். ஓ.பி.எஸ் அணியில் எடுக்கும் பல்வேறு முடிவுகளுக்கு முன் கலந்து பேச தத்தத்துக்கு அழைப்பே இல்லயாம். கடந்த சில நாட்களாக இந்த நிலைமை நீடிப்பதால் மிகவும் மன உளைச்சலில் இருக்கும் நத்தம் விரைவில் ஓ.பி.எஸ் அணியிலிருந்து இ.பி.எஸ் அணிக்கு இடமாறுதல் வாய்ப்பிருக்கிறதாம்.