MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!

ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!

திமுகவின் தேர்தல் தோல்வி எதிரொலியாக, உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் சபரீசனால் தொடங்கப்பட்ட 'பென்' நிறுவனம் கலைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது உதயநிதி சபரீசன் இடையே நிலவும் 'மாமன் - மச்சான்' அதிகார போட்டிய என விமர்சனம் எழுந்துள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 15 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிரடி திருப்பங்களுடன் காணப்படும் தமிழக அரசியல்
Image Credit : ANI

அதிரடி திருப்பங்களுடன் காணப்படும் தமிழக அரசியல்

திமுகவின் தேர்தல் தோல்வி எதிரொலியாக, அக்கட்சியின் அதிகார மையமாகத் திகழ்ந்த ‘பென்’ (PEN) நிறுவனம் உதயநிதி ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் கலைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக மேலிடத்தில் ‘மாமன் - மச்சான்’ இடையிலான புதிய அதிகார மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பென் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி

கடந்த 2022-ம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனால் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘பென்’ நிறுவனம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் மீடியா ஒருங்கிணைப்பு பணிகளை மட்டும் கவனித்து வந்த இந்த நிறுவனம், காலப்போக்கில் திமுகவின் உட்கட்சி விவகாரங்களில் அசுர வேகத்தில் ஊடுருவியது என தெரிகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அமைச்சர்களைக் கண்காணித்த ‘நிழல்’ அதிகாரம்
Image Credit : ANI

அமைச்சர்களைக் கண்காணித்த ‘நிழல்’ அதிகாரம்

திமுகவின் மூத்த அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரையும் கண்காணிக்கும் பணியை பென் நிறுவனம் கையில் எடுத்தது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களுடன் கூடிய திட்டங்களை முன்னெடுத்து, கட்சிக்குள் தனது அதிகாரத்தை நிலைநாட்டியது. இதனால் கட்சி நிர்வாகிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் திணறி வந்தனர்.

தவறான அறிக்கைகளும், நிர்வாக மாற்றங்களும்

கட்சித் தலைமைக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டாதவர்கள் எனப் பட்டியல் தயாரித்து, பல நிர்வாகிகளின் பதவிகளைப் பறிக்கவும், தங்களுக்குச் சாதகமானவர்களை நியமிக்கவும் பென் நிறுவனம் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகளைத் தன்வசப்படுத்தி, கள நிலவரம் குறித்து தலைமைக்குத் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளை இந்த நிறுவனம் அளித்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Articles

Related image1
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்
Related image2
Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
34
உதயநிதியின் அதிரடி சாட்டை
Image Credit : Asianet News

உதயநிதியின் அதிரடி சாட்டை

முதலமைச்சர் ஸ்டாலின் பென் நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுமையாக நம்பியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த நிறுவனத்தின் தலையீடுகள் மீது கடும் அதிருப்தி இருந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் பென் நிறுவனம் பரிந்துரைத்த 95 சதவீத வேட்பாளர்கள் படுதோல்வியைத் தழுவியது, உதயநிதியின் கோபத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.

கடந்த 4-ம் தேதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பென் நிறுவனம் செய்த குளறுபடிகளைப் பட்டியலிட்டு உதயநிதி மிகக் கடுமையாகப் பேசியதாக கூறப்படுகிறது. அதன் விளைவாக, தற்போது உதயநிதியின் நேரடி உத்தரவின் பேரில் பென் நிறுவனம் அதிரடியாகக் கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

44
மீண்டும் வெடித்த அதிகார மோதல்
Image Credit : X

மீண்டும் வெடித்த அதிகார மோதல்

சபரீசனால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தை உதயநிதி கலைத்ததாக கூறப்படுவது திமுக குடும்பத்திற்குள் நிலவி வரும் ‘மாமன் - மச்சான்’ அதிகாரப் போட்டியை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என அரசியல் கிசுகிசு உலாவருகிறது. பென் நிறுவனத்தைத் தொடர்ந்து, சபரீசனின் சகோதரி நடத்தி வந்த ‘குன்’ (KUN) நிறுவனமும் கலைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அரங்கேறி வரும் இந்த அதிரடி மாற்றங்கள், கட்சியின் உள்வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திமுக
உதயநிதி ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Recommended image2
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
Recommended image3
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..
Related Stories
Recommended image1
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்
Recommended image2
Advocate General Vijay Narayan: தமிழகத்தின் புதிய அரசு தலைமை வழக்கறிஞர் நியமனம்! யார் இந்த விஜய் நாராயண்? விஜய்யின் வழக்கிலும் வாதாடியவர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved