panneerselvam into tharmayuththa hero sasikala as neelambari
கடந்த ஆண்டு பிப்ரவரி 7 அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே யாராலும் மறக்க முடியாத நாள். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு சசிகலாவிற்கு எதிரான அணுகுண்டை வீசினார்.
கட்சி, ஆட்சியில் மக்களால் விரும்பும் ஒருவர் தான் இருக்க வேண்டும். எனவே கட்சி, ஆட்சியை மீட்க தனி ஒருவனாக போராடத் தயாராகி விட்டேன் என தர்மயுத்தம் தொடங்கிய அடுத்த சில மணி நேரங்களில் நள்ளிரவில் போயஸ் கார்டனில் முதன்முறையாக ஊடகங்களுக்கு முதல்முறையாக சந்தித்த சசிகலாவின் சுயரூபம் உலகமே பார்த்தது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்ததும் அதிமுகவின் தனக்கான அதிகாரத்தை முழுமையாக அடைய நினைத்த சசிகலா, வெளிப்படயாகவே அதை செய்ய தொடங்கினார். தனக்கு விருப்பம் இல்லாதது போல கட்சியின் மூத்த தலைவர்களை அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க வைத்ததோடு, தமிழக முதல்வராகவும் வரவேண்டும் என கோரிக்கை விட வைத்தார்.

முதலில், கட்சியின் பொதுசெயலாளராக ஆக்கிவிட்டு, ராஜினமா கடிதம் கொடுத்துவிட்டு, நேராக ஜெயலலிதாவின் சமாதி முன்பு தொடங்கிய தர்மயுத்தம் தொடங்கி இன்றோடு ஒருவருடம் முடிகிறது.
“ஜெயலலிதா” இரும்பு மனுஷியாக இருந்தவர், இந்தியாவையே தென்னிந்தியாவின் அதிகார மையமாக திகழ்ந்த போயஸ் கார்டனை நோக்கித்தான் இருந்தது. அப்படி ஒரு கம்பீரம், அசைத்துக் கூட பார்க்க முடியாத ஆளுமை என நிரூபித்துக் காட்டியவர். கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு மிஞ்சி யாரும் இல்லை எனும் அளவிற்கு ராணுவ கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தனது காலடியிலேயே வைத்திருந்தது ஏன் என்று ஜெயலலிதா மறைவிற்குப் பின் அவர்களின் பேச்சுகள் ஏன் இதுவரை அவர்களை வாய் திறக்க விடவில்லை என்பதை நாடே சிரித்தது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வராக இருக்க பார்க்க முடியாத சசிகலா கட்சிப் பொறுப்புக்கு தன்னை நியமிக்க தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மூலம் நெருக்கடி கொடுத்தார். இதில் முதல் வெற்றி கட்சியை கைப்பற்றியது.

அடுத்ததாக ஆட்சியை கைப்பற்ற வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில், பிப்ரவரி 5ல் சசிகலா சட்டமன்றத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலக கூட்டத்தில் அறிவித்த கையோடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த பின்னர் அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டில் இதே நாளில் தான் மாலை 9 மணியளவில் ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் மேற்கொண்டார்.
அதிமுகவில் சாந்தமாக அமைதிக்கே பெயர் போன பன்னீர் தனியாக இரவு ஒன்பது மணிக்கு ஜெயலலிதா சமாதிக்கு சென்றதும் ஒட்டு மொத்த தமிழக மக்களை பார்க்க வைத்தார். இந்திய மீடியாக்களை சென்னை மெரினாவிற்கு தெறித்து வரவைத்தார். ஒட்டு மொத்த மீடியாக்கள் வர சுமார் 40 நிமிடம் ஆனது அதுவரை தியானமிருந்த அவர். 40 நிமிடம் தியானம் களைத்த பின் தான் நிர்பந்தப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ததாக கூறி சசிகலா கூடாரத்தை அதிரவைத்தார்.
முதல்வர் பதவியில் என்னை உட்காரவைத்து விட்டு எனக்குக் கீழ் இருக்கும் அமைச்சரை வைத்து தன்னை முதல்வர் பதவியில் இருந்து விலகச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என தர்மயுத்தத்தை தொடங்கினார்.

ஜெயலலிதாவின் ஆன்மாவின் உந்துதலாலேயே இந்த உண்மையை உங்கள் முன்னே சொல்கிறேன் என பொங்கி எழுந்தார். ஓ.பன்னிர்செல்வத்தின் இந்த தர்மயுத்ததிற்கு முதலில் வந்தவர் பாஜகவில் இருந்து அதிமுகவிற்குத் தாவிய மைத்ரேயன் எம்பி. இவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இரவோடு இரவாக வந்து ஆதரவு தெரிவித்தது. அப்போது தொடங்கியது தான் பாஜக பன்னீர் கூட்டணியில் ஒரு தர்மயுத்தம் என அப்போது யாருக்கும் தெரியாது.
மைத்ரேயனைத் தொடர்ந்து மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன் என ஒட்டுமொத்த மெயின் தலைகள் உருந்து வந்ததால் டென்ஷனான சசிகலா சசிகலா, சட்டசபை கூட்டத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவினரை பார்த்து சிரித்த போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது என ஒட்டுமொத்த பழியையும் தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களை கடுப்பாக்க செய்தது.
மன்னர் குடி சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் இருந்ததை விரும்பாத எதிரான அலை அதிமுகவினர் மத்தியில் எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகத் தொடங்கியது. சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேற வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தர்மயுத்தத்தின் முதல் கோரிக்கையாக இருந்தது.

நீலாம்பரியாக மாறிய சசிகலா...
அதிமுகவில் ஜெயலலிதாவிற்குப் பிறகு தாங்கள் தான் எல்லாம் என்று எண்ணிய சசிகலா குடும்பத்தின் எண்ணத்தில் விழுந்த முதல் இடி ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த தியானம். அண்ணன் செத்த திண்ணை காலியானதும் அது தனக்குத்தான் என்று எண்ணிக் காத்திருந்த சசிகலாவின் ஆசையிலும் மண்ணை வாரிப் போட்டார்.
பிப்ரவரி 7ம் தேதி பன்னீர்செல்வம் சொன்ன குற்றச்சாட்டுக்கு நள்ளிரவு 1.15 மணியளவில் போயஸ் கார்டன் இல்ல வாசலில் தனது முதல் பேட்டியை அளித்தார் சசிகலா. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது சென்டிமென்ட்டாக பேசி கர்சீப் நனைத்த சசிகலா, பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து கொடுத்த பேட்டியில் கோபமும், ஆக்ரோஷமும் கொப்பளித்தது.
தனக்கு எதிராக ஒருவர் எப்படி கிளம்பலாம் என்ற எரிச்சலின் வெளிப்பாடாகவே அந்த பேட்டி இருந்தது.
பச்சை நிற சேலையில் கண்ணில் கொலை வெறியோடு போயஸ் கார்டனிலிருந்து வெளியே வந்த சசிகலா தொண்டர்களை பார்த்து இரட்டை விரல்களை காட்டி பின் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருக்கிறது.

காரணம் 4 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரும் முதல்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்கள் என சசிகலாவின் சைகையோடு கையசைத்து பேசிய பேச்சு இன்னும் யாராலும் மறக்க முடியாது அப்படியொரு கொடூர சம்பவம் அது கைகளை சேர்த்தும், கண்களை உருட்டியும், நாக்கை மடக்கியும் பேட்டியில் ஒரு கர்வமும், எகத்தாளமும் மிரட்டினார்.
நிர்பந்தப்படுத்தினோம் என்று யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததைத் தான் அவர் சொல்கிறார். நீங்கள் அன்றே பார்த்திருக்கலாம் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருந்தார், அப்படி இருக்கும் போது ஏன் நிர்பந்தப்படுத்தப் போகிறோம் என கர்ஜித்தார் சசிகலா.

கூவத்தூரில் நடந்த கூத்திர்க்குப் பின் முதல்வராக எடபபாடியாரை முதல்வராக்கிய சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன ஆக்ராஹாராவில் தஞ்சமடைவதற்க்கு முன்பு ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதி மேல் மூன்று முறை கையை அடித்து சபதம் செய்தார்.
இப்போது அவரின் ஒட்டுமொத்த கோபமும் முதல்வராகும் தனது கனவில் மண்ணை வாரிப் போட்ட பன்னீர் மீதும், கூவதூரில் பலகோடியை இறைத்து வாங்கிக் கொடுத்த முதல்வர் பதவிய வைத்துக்கொண்டு பன்னீருடன் கூட்டு சேர்ந்து தனது குடும்பத்திற்கு எதிராக செயல்படும் எடப்பாடியாரின் மேல், படையப்பா படத்தில் ரஜினியை பழிவாங்க பல வருடங்களாக துடிக்கும் நீலாம்பரியைப்போல இருவரையும் பழிவாங்க ஜெயிலில் துடித்துக் கொண்டிருக்கிறார்.
