பெரியகுளம் கோபாலகிருஷ்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன குடும்பத்தோடு கலந்து கொண்டார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் உள்ளது கோபாலகிருஷ்ண சுவாமி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை இக்கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் பிரதீப், ரவீந்திரநாத், மற்றும் பேரன்கள் ஆகியோருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு, தேனி நகர அதிமுக செயலாளர் முருகேசன், துணை செயலாளர் காசிமாயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
