முதலமைச்சராக பதவி விலகியதை அடுத்து தன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசின் NSG பாதுகாப்பை ஓ பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.

அதிமுகவில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓபிஎஸ்.

ஜெ. உயிருடன் இருந்த போது 2 முறையும் அவர் மறைவுக்கு பின் 1 முறையும் முதலமைச்சராக இருந்துள்ளார்.

ஜெயலலிதா இருந்த போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் தனக்கு எந்த பாதுகாப்பு வேண்டாம் என்று சாதாரணமாக இருந்தார்.

அப்போது முதல்வர் வீட்டுக்கு உள்ளேயே ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சியினர் போராட்டம் நடத்தி நுழைய முயன்றனர்.

இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.

பின்னர் முதல்வருக்கு வழக்கமாக வழங்கப்படும் கான்வாய் மற்றும் கொர்ஷேல் போலேசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஜெ. மறைவுக்கு பின்னர் ஒன்றுபட்ட அதிமுகவின் முதலமைச்சராக ஓபிஎஸ் தேர்வு செய்யபப்ட்டார்.

அப்போது அவருக்கு முதலமைச்சருக்கு உரிய அனைத்து பாதுகாப்புகளும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

முதலமைச்சர் பதவிவ்ளிருந்து ஓபிஎஸ் விலகி காபந்து முதல்வராக இருந்தார்.

ஆனாலும் முதலமைச்சருக்கு உரிய அனைத்து பாதுகாப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் அதிமுகவில் தனி அணியாக ஓபிஎஸ் செயல்பட்டபோது அவரது பாதுகாப்பு கருதி வேறு சில பவுன்சர்கள் என்று அழைக்கபடும் தனியார்கள் பாதுகாப்பும் அளிக்கபட்டது.

இதனிடையே முதலமைச்சராக எடப்பாடி பதவியேற்றதையடுத்து பன்னீர்செல்வம் சாதாரண எம்எல்ஏ நிலைக்கு வந்தார்.

ஒரு அணியின் தலைவராக ஓபிஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரது பாதுகாப்பு கருதி முன்னாள் முதலமைச்சர் என்கிற முறையில் தேசிய பாதுகாப்பு பிரவு (NSG) அல்லது மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

3 முறை முதல்வராக இருந்ததால் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு இந்த பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.