panneer and palanisami Supporters beaten Dinakaran happy
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த விழா அழைப்பிதழில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பெயர்கள் விடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகுந்த கோபம் அடைந்தனர்.
இதையடுத்து பழனிச்சாமி ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் தொடங்கிய சண்டை கைகலப்பில் முடிந்தது. இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அங்கிருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
தனித்து செயல்பட முடியாததால் பன்னீர்செல்வம் மீண்டும் போர்க்கொடி தூக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் மோதிக்கொண்டது பல கேள்விகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
