Paneer is ready to give the team the next crisis - urgent advice to senior and key executives
சசிகலா தரப்பை திணறடித்து வரும் ஒ.பி.எஸ் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்த ஒ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு என்று ஒரு தனி கூட்டமே தமிழகத்தில் திரண்டு கொண்டு வருகிறது. தினமும் வீடு தேடி சென்று ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்களின் மனதை கவர்ந்து வருகிறார் ஒ.பி.எஸ்.
இதற்கு முதல் காரணம், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்பு அவரது அக்காள் மகனான டி.டி.வி தினகரன்தான் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவித்திருக்கும் இந்நிலையில், சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் ஒரு மகாபாரத போரே நடைபெற்று வருகிறது.
சசிகலாவை விட்டு பிரிந்த நாள்முதலே ஒ.பி.எஸ் தரப்பினர் கட்சியையும் சின்னத்தையும் மீட்டெடுப்போம் என வாக்குறுதி எடுத்து வருகின்றனர்.
இதனிடையே அதிமுகவின் பிரதான சின்னம் இரட்டை இலையை கைப்பற்ற தேவையான அனைத்து நடைவடிக்கையும் மேற்கொண்டு வருகிறனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்க வேண்டும் என்ற இருதரப்பு வாதங்களையும் தேர்தல் ஆணையம் இன்று தான் நேரில் கேட்டறிந்தது.
இதுகுறித்த முடிவு பெரும்பாலும் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது குறித்து பன்னீர்செல்வம் அணி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
