கடலூர் மாவட்டம். கீழஅருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கிழக்கு கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் இன்று மாலை கீழ்அருங்குணத்தில் மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த கொலை குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்