பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்று  இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் ஆரக்காலையே அசைத்து பார்க்கும் அளவிற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவை பழி தீர்க்க நேரம் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவது, தீவிரவாதிகளை நாட்டிற்குள் ஊடுருவ செய்வது என இந்தியாவை வம்பிழுக்கும் வேலைகளிலும் அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் அனைத்தையும் இந்தியா நிதானமாக கையாண்டு வருவது பாகிஸ்தானுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் இந்தியாவிற்கு எதிரான சதி திட்டம் தீட்டி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிரதமர்  மோடிக்கு  குறி வைத்திருப்பதாகவும், வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.  நாட்டின் பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரைக் குறிவைத்து பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்காக தற்கொலை படையைகளை தயார் செய்து வருவதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுதொடர்பாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு  தனது கூட்டாளி அமைப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது பற்றி  குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ஓரிரு  மாதங்களுக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு  ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அதன் துணை இயக்கங்களுடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக வட இந்தியாவில் அமிர்தசரஸ் பதான்கோட் லக்னோ ஜெய்ப்பூர் மற்றும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு பெங்களூர் ஆந்திர மாநிலம் இந்திய ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட இடங்கள் அவர்களின் டார்கெட் பட்டியலில் உள்ளதாகவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கின்றன.