Asianet News TamilAsianet News Tamil

’இந்துக்கள் அனைவரும் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்’...பாகிஸ்தான் அமைச்சரின் அல்பத்தனமான கமெண்ட்...

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான பதட்டம் இன்னும் தணியாத நிலையில், ‘இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்’ என்று சர்ச்சையாகப் பேட்டி அளித்து இந்தியர்களின் ஒட்டுமொத்த ஆத்திரத்துக்கு ஆளாகியிருக்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர்.

pak ministers comment on hindus
Author
Chennai, First Published Mar 5, 2019, 1:21 PM IST

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் தொடர்பான பதட்டம் இன்னும் தணியாத நிலையில், ‘இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள்’ என்று சர்ச்சையாகப் பேட்டி அளித்து இந்தியர்களின் ஒட்டுமொத்த ஆத்திரத்துக்கு ஆளாகியிருக்கிறார் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர்.pak ministers comment on hindusபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாச்சார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் “சமா” செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை. பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை.

இந்தியர்கள் ஒரு மாயை நிலையில் வாழ்கிறார்கள். இஸ்லாமியர்களை விட 7 மடங்கு சிறப்பாக இருப்பதாக தங்களை தாங்களே சொல்லி ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது’ என்று  பாகிஸ்தான் மந்திரி சோகன் கூறியிருந்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இவ்வாறு கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் மந்திரி சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.pak ministers comment on hindus

பாகிஸ்தான் சிறுபான்மை நலத்துறை மந்திரி மசாரி கூறுகையில், “எந்த ஒரு மதத்தினரையும் விமர்சிக்கும் உரிமை தனிப்பட்ட யாருக்கும் கிடையாது. பாகிஸ்தான் நாட்டுக்காக இந்துக்களும் தியாகம் செய்துள்ளனர். சகிப்புதன்மையை கையாள வேண்டும்” என்றார். பிரதமர் இம்ரான்கானும் மந்திரி சோகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து மந்திரி சோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios