கரூரைச் சேர்ந்த முன்னாள்  போக்குவரத்து துறை அமைச்சரான  செந்தில் பாலாஜி  டி.டிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.  இந்த நிலையில்  தான்  திடீரென தினகரனுக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  செந்தில் பாலாஜி திமுகவில் நாளை ஸ்டாலின் முன்னிலையில் இணைகிறார்.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது பற்றி அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் இதுவரை வாய்திறக்கவில்லை, ஆனால் ஆண்டிப்பட்டி தங்க த்தமிழ்செல்வன் மட்டும்  '"நான் எப்பவும் அண்ணன்  பக்கம்தான் இருப்பேனே தவிர திமுக பக்கம் எல்லாம் போக மாட்டேன் '"அப்படி ஒரு பொய்யான தகவல்களை யாரோ? பரப்பி வருகிறார்கள் என சொன்னதாக சொன்னார். 

இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நண்பர் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில்; செந்தில் பாலாஜி கட்சி மாறுவது குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர் தவறான முடிவை எடுக்க மாட்டார் கட்சி மாறுவது குறித்து வரும் செய்திகளுக்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்திருக்கலாம் என வருத்தமாக கலங்கியுள்ளார். 

திமுகவில் இணையவேண்டுமென தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அனைத்து விஷயமும் பழனியப்பனிடம் சொல்லிவிட்டே நடத்திய செந்தில் பாலாஜி, கடைசியாக பழனியப்பனிடம் ஒரு வார்த்தயைக்கூட சொல்லாமல் திமுகவில் இணைய தனியாக சென்னைக்கு சென்றது பழனியப்பனை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.