pa valarmathi explained why she got periyar award
2017ம் ஆண்டுக்கான பெரியார் விருது தமிழக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது முதல் சமூக வலைதளங்களில் பலர் இதை கிண்டலடித்தனர். பா.வளர்மதிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டதை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கிண்டலடித்தனர்.
தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பெரியார் விருதை பெற்ற பா.வளர்மதி, தனக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் தன்னை சமூக வலைதளங்களில் கிண்டலடித்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் விளக்கமளித்தார்.
முதல்வரிம் இருந்து விருது பெற்ற பா.வளர்மதி, பெரியார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 9 வயது சிறுமியாக மேடைப் பேச்சைத் தொடங்கியவள் நான். இன்று அவர் பெயரால் விருதை பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.
தினந்தோறும் கோயில் செல்லும் வளர்மதிக்கு பெரியார் விருதா என சமூக வலைதளங்களில் என்னைக் கேலி செய்பவர்கள் யார் என எனக்குத் தெரியும்
கடவுள் ஒழிப்பு கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கை தான். பெண் உரிமை கொள்கையை மையப்படுத்தியே ஒரு பெண்ணுக்கு பெரியார் விருது கொடுத்துள்ளார் முதல்வர் என்று வளர்மதி தெரிவித்தார்.
