Asianet News TamilAsianet News Tamil

திக்கு தெரியாமல் செல்லும் பட்ஜெட்... நிர்மலாவின் பட்ஜெட்டை போஸ்ட்மார்டம் செய்யும் ப.சிதம்பரம்!

"இந்த பட்ஜெட்டில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. விளைவித்த பொருட்களுக்கு உரிய விலைக்கிடைக்காமல் விவசாயிகளின்  வாடுகிறார்கள். விவசாயிகளின் வருமானம் 4 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கிறது. மத்திய பாஜக அரசால் விவசாயிகளின் வருமானத்தை பெறுக்க முடியவில்லை."

P. Chidambaram slam Niramala's union budget
Author
Delhi, First Published Feb 2, 2020, 6:59 PM IST

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் திக்கு தெரியாமல் செல்கிறது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். P. Chidambaram slam Niramala's union budget
நாடாளுமன்றத்தில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டை விமர்சித்துவருகின்றன. அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பட்ஜெட் அம்சங்களைக் குறிப்பிட்டு விமர்சித்தார். P. Chidambaram slam Niramala's union budget
“இந்த பட்ஜெட்டில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. விளைவித்த பொருட்களுக்கு உரிய விலைக்கிடைக்காமல் விவசாயிகளின்  வாடுகிறார்கள். விவசாயிகளின் வருமானம் 4 ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கிறது. மத்திய பாஜக அரசால் விவசாயிகளின் வருமானத்தை பெறுக்க முடியவில்லை. அவர்களால் பெறுக்கவும் முடியாது. அதுமட்டுமா? இந்த ஆட்சியில் பொருளாதரா வளர்ச்சி குறைந்துவிட்டது. அதன் விளைவாக சிறு, குறு தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன.

P. Chidambaram slam Niramala's union budget
எல்.ஐ.சியை தனியார்மயமாக்கும் முயற்சியாகவே தெரிகிறது. அதன் அரசு பங்குகளை விற்பனை செய்யமுடிவு செய்துள்ளது அதன் முயற்சிதான். கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அந்த நிதியை அரசு முழுமையாக செலவழிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் திக்கு தெரியாமல் செல்கிறது” என சாடினார் ப. சிதம்பரம்.

Follow Us:
Download App:
  • android
  • ios