Asianet News TamilAsianet News Tamil

மகன் கார்த்தியுடன் ப.சிதம்பரம் கிரேட் எஸ்கேப்... சிவகங்கையில் ஹெச்.ராஜா சொன்னது நடந்து விடுமோ..?

கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அவரது பதவி கேள்விக்குறியாகி விடும்.

P. Chidambaram Great Escape With Son Karthi
Author
Tamil Nadu, First Published Aug 1, 2019, 1:41 PM IST

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.P. Chidambaram Great Escape With Son Karthi

கடந்த 2006 ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர் ப.சிதம்பரம். அப்போது ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உறுதுணையாக செயல்பட்டுள்ளது. ஆனால், இந்த முதலீட்டிற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு உரிய அனுமதி தரவில்லை. P. Chidambaram Great Escape With Son Karthi

எனவே சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தங்களை கைது செய்ய தடைக் கோரி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தனர். 

இதையும் படிங்க: - மு.க.ஸ்டாலினை மீறி எதுவும் செய்ய முடியாது... வேலூருக்கு வராதேம்மா... கனிமொழியிடம் துரைமுருகன் கெஞ்சல்..!

அதற்கு இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் தொடர்ந்து கைதுக்கான தடையை நீட்டித்து, நீதிமன்ற உத்தரவை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இன்று நடைபெற்ற ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு விசாரணையில், வரும் 9ஆம் தேதி வரை இருவரையும் கைது தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 P. Chidambaram Great Escape With Son Karthi

கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அவரது பதவி கேள்விக்குறியாகி விடும். ஏற்கெனவே இந்த வழக்கை காரணம் காட்டி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா சிவகங்கையில் விரைவில் தேர்தல் வரும் எனக் கூறி வருகிறார். 

இதையும் படிங்க:- விடுகதை போட்டு கதற விட்ட அதிமுக எம்.பி.,கள்... விடைதெரியாமல் விழிக்கும் ப.சிதம்பரம்..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios