ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திஹார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவரை தனி அறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ப.சிதம்பரம் வரும் 19ம் தேதி வரை அதாவது 15 நாட்கள் வரை அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.  திஹார் சிறைக்கு சென்று விடக்கூடாது என காலம் தாழ்த்தி வந்த அவர், அமலாக்கத்துறை விசாரணைக்கு தான் செல்லத்தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்கு முன் ப.சிதம்பரத்தை கடந்த 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையாக மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், காவல் இன்றுடன் நிறைவு பெற்றதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட இருக்கிறார். அதற்கு முன்பாக திஹார் சிறையில் தனி அறையும், வெஸ்டர்ன் டாய்லட் வசதியும் செய்து தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தனி அறை மட்டும் ஒதுக்கி உத்தரவிடப்பட்டது. ஆனால் திஹார் சிறையை பொறுத்தவரை இந்தியன் டாய்லெட்டுகள் மட்டுமே உள்ளது. அவரது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுமா என்பது தெரியவில்லை. 

அங்கு விஐபியாக சிறைக்கு செல்பவர்களுக்கு தனியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட மாட்டாது என்பதே விதி. இந்நிலையில் அவரது உந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.