Asianet News TamilAsianet News Tamil

ருசியான சாப்பாட்டிற்கு ஏங்கும் ப.சிதம்பரம்..!! வீட்டு சாப்பாடு கேட்டு நச்சரிப்பு...!!

சிறையில் வழங்கப்படும் உணவு, தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை. எனவே வீட்டில் சமைத்த உணவை  தனக்கு வழங்க  வேண்டும் என்று ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரினார் . 

p. chidambaram asking house made food
Author
Delhi, First Published Sep 13, 2019, 3:15 PM IST

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ,தனக்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க வேண்டும் என ப.சிதம்பரத்தின் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

p. chidambaram asking house made food

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றத்திற்காக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டது சரிதான் எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரின் கைதை  மக்கள்  இருவேறுவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்  அவரை கைது செய்தாலும்  அவரிடமிருந்து எந்த தகவலையும் தங்கலால் பெற முடியவில்லை எனவும், விசாரணைக்கு  அவர் முழுமையாக ஒத்துழைக்க மறுக்கிறார் எனவும் சிதம்பரத்தின் மீது  சிபிஐ அதிகாரிகள் நீதி மன்றத்தில் புகார் தெரிவித்திருந்தனர். 

p. chidambaram asking house made food

இதனால் சிதம்பரத்தை  நீதிமன்றம் கண்டித்ததுடன், அவரின் ஜாமின் மனுவையும் ரத்து செய்து  அவரை திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. வயது மூப்பின் காரணமாக தன்னை திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்,  அதற்கு மாற்றாக வேறொரு சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று சிதம்பரம் கோரினார். ஆனால் ,அவரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அத்துடன் தொடர்ந்து அவரின் ஜாமின் மனுக்களையும் நீதிமன்றம் புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் வழங்கப்படும் உணவு தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை. எனவே வீட்டில் சமைத்த உணவை  தனக்கு வழங்க  வேண்டும் என்று ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரினார் . ஆனால் , சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறி அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்,  சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதே உணவுதான் சிதம்பரத்திற்கும் வழங்கப்பட வேண்டும்  என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது . 
 

Follow Us:
Download App:
  • android
  • ios