ப.சிதம்பரத்திற்கு உடல் நலக்குறைவு..! எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை..! 

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்துக்கு வீட்டு உணவு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என சிபிஐ தரப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி அனுமதி வழங்கினார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார். இதையடுத்து, வரும் 3-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் சிறை உணவுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த உணவு அனுமதிக்குமாறு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறை உணவு ஒத்துக் கொள்ளாததால் சிதம்பரத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் இதுவரை 4 கிலோ எடை குறைந்துள்ளதால் வீட்டு உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதற்கிடையே, வீட்டு சாப்பாடுக்கு அனுமதி கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கைக்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து வீட்டு உணவும் வழங்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.