‘வணக்கம் தமிழ்நாடு! மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்’ - நெகிழ்ந்த பிரதமர் மோடி !

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

Overwhelmed by the wonderful reception in Dindigul PM Modi tweets

இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் திண்டுகல் வருகை தந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக பொன்னியின் செல்வன் நாவல் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

பிரதமர் மோடி:

இதனை தொடர்ந்து காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இசையுலகில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய போது, காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.

Overwhelmed by the wonderful reception in Dindigul PM Modi tweets

இதையும் படிங்க.பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் புத்தகம் என்ன ? அட.! இந்த நாவலா ?

பிரதமர் மோடி பேச்சு:

கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்போதைய தற்சார்பு திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படமுடியும். காதி பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும். பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது என்று பேசினார்.

இதையும் படிங்க..கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின் !

பிரதமர் மோடி ட்வீட்:

இந்த நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘வணக்கம் தமிழ்நாடு! திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட மிகச்சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..பிரதமர் மோடியை சந்திப்பது ஓபிஎஸ் டீமா? எடப்பாடி டீமா? எல்லாமே ரத்து.? வெளியான பரபரப்பு தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios