மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு மருத்துவ கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்கின்றனரா என்பதை கண்காணி ப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை மருத்துவ கல்வி இயக்ககம் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்து இட ஒதுக்கீட்டிற்கான மருத்து கலந்தாய் நடைபெற்று வருகிறது கடந்த புதன் கிழமை நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த. தமிழக எதிர்க்கட்சிகளும் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில் இந்த கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படுவதாகவும், இருப்பிட சான்றிதழ்கள் குறித்து சுய சான்று வழங்க நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் கையெழுத்து பெற கலந்தாய்வு நடைபெறும் இடத்திலேயே  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு 30க்கும் அதிகமான தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் மருத்து கலந்தாய்வில் பங்கெடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து நடைபெற உள்ள மருத்துவ கலந்தாய்வில் இது போன்ற போலி சான்றிதழ்களுடன் மாணவர்கள் கலந்து கொள்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை மருத்துவ கல்வி இயக்ககம் அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழுவில் செல்வராஜ், பராசக்தி, இந்துமதி, ஆவுடையப்பன், ராஜசேகர் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.