இச்செய்தியை நம்புவதா இல்லையா என்று குழம்புவதற்கு முன் இவர்களில் போலி டாக்டர்கள் யாரும் இருக்கிறார்களா என்று கண்டுபிடித்துத் தெளிந்துகொள்ளவேண்டியது வாசகர்களின் பொறுப்பு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 பேரில் 20 பேர் டாக்டர்களாம்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. 7 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களில் அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி), வைத்திலிங்கம் (ஸ்ரீபெரும்புதூர்), கோவிந்த சாமி (கடலூர்) ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

 தி.மு.க. 20 பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் கலாநிதி வீராசாமி (வட சென்னை), செந்தில்குமார் (தர்மபுரி), கவுதம்சிகாமணி (கள்ளக்குறிச்சி) ஆகியோர் டாக்டர்கள். இதேபோல் 20 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களில் வேணுகோபால் (திருவள்ளூர்), ஜெயவர்தன் (தென்சென்னை) ஆகியோர் டாக்டர்கள். அ.திமு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. 4 தொகுதியில் களம் காண்கிறது. இதில் அக்கட்சி வேட்பாளர் வி.இளங்கோவன், டாக்டர் ஆவார்.

தூத்துக்குடியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தென்காசியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் வேட்பாளர்களில் விஷ்ணு பிரசாத் (ஆரணி), செல்லகுமார் (கிருஷ்ணகிரி), மக்கள் நீதி மய்யம் கட்சியில் லோகரங்கன் (திருவள்ளூர்), சுதாகர் (திண்டுக்கல்), சுப்பிரமணியன் (புதுச்சேரி) ஆகியோர் டாக்டர்களாக உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கரூர் வேட்பாளர் கருப்பையா டாக்டர் ஆவார். ரமேஷ்பாபு (திருவண்ணாமலை), கார்த்திகேயன் (மத்திய சென்னை) ஆகியோர் பல் மருத்துவர்களாகவும், பாஸ்கர் (நாமக்கல்) கால்நடை மருத்துவராகவும் உள்ளார். 

ஆக டாக்டர் தொழிலை விட அரசியல்ல நல்ல வருமானம் வர்றது வெட்டவெளிச்சமாயிருக்கு.