மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் மூன்றாவது கூட்டணி அமைக்கத் தயாராகி வருகிறார். அரசியலில் களமாடி வரும் அவரைப்பற்றி சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு பகிரப்படுகின்றன. 

அதில், ‘’தேவர் மகன் படத்திற்குப் பின் தான் கிறிஸ்தவ இயற்பியல் படித்தவன் என்றும் அதை பரப்புவதில் ஆர்வம் உண்டு என்றும் சொன்னவர். அன்பே சிவம் படத்தில் நெற்றித் திருநீற்றை அழிக்கச் செய்து சிலுவை போட்டுக் காண்பித்தவர். மன்மதன் அன்பு படத்தில் மஹா லட்சுமி தேவியிடம் எத்தனை நாள் இந்தப் படுத்துக் கொண்டிருக்கும் நாராயணன் காலடியில் இருக்கப் போகிறாய், என்னோடு வா என்று யாரையோ அழைப்பது போல அழைத்தவர்.

எத்தனையோ தொந்திப் பிள்ளையார்கள் பீச்சில் வாக்கிங் போகும் போது கோயில் பிள்ளையாரே நீ மட்டும் இப்படி உட்கார்ந்திருக்கிறாயே என்று விநாயகரை கேலி செய்தவர். மதுரை கட்சி துவக்கவிழாவில் விஸ்வரூபம் படத்திற்கு வந்த எதிர்ப்பை மட்டும் குறிப்பிடாமல் இதர பட எதிர்ப்புகளை மட்டும் குறிப்பிட்டவர். இவரின் சகோதரர் சாருஹாசன் என்றோ மதம் மாறி கிறிஸ்தவ பிரச்சாரத்தில் இருக்கிறார். இவரின் சகோதரரின் மகள் சுஹாசினியின் மகன் வாட்டிகன் சிட்டியில் கிறிஸ்தவ இறை இயல் படிக்கிறார். இதில் சுஹாசினிக்குப் பெருமையாம்!

மகள் ஸ்ருதியின் காதலர் தீவிர கிறிஸ்தவராம்..! ஈவேராவின் சீடராம், காரல் மார்க்ஸின் சீடராம், இந்து இயக்கதவரை கொன்று குவிக்கும், லவ்ஜிகாத் மூலம் இந்துப் பெண்கள் அழிக்கப்படுவதை ஆதரிக்கும் பிணராயி விஜயன் இவரின் அபிமான தலைவராம்..! தற்போது இவருக்கு கட்சி துவங்க பணம் வழங்கியது மெஷினரிகள் என்று குற்றம் சாட்டியுள்ளது அதிமுகவின் ஐ.டி செல்.

 

சிந்திக்க்கப் பட வேண்டிய, ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய தகவல் இது. "உதட்டோடு மட்டுமே உறவாடும்" இவர், உள்ளத்தால் உறவாட தகுந்தவர் அல்ல, தேசத்தை உடைக்கவரும் சக்திகளுக்கு ஆதரவானவர் என்பததில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இதுதான் மையத்தின் கதை’’ எனக் கூறப்பட்டுள்ளது.