Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் 4 எம்பிக்கள் பதவி காலி..?? சட்டத்தை தூசு தட்டியது டெல்லி...!! ஸ்டாலின் அதிர்ச்சி...!!!

தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்..

other party members couldn't contest the election  another party symbol
Author
Chennai, First Published Sep 17, 2019, 3:54 PM IST

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணையில்  திமுக, அதிமுக கட்சி சின்னங்களில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பிக்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

other party members couldn't contest the election  another party symbol

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்,  கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ்,  மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின்  சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது  எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

other party members couldn't contest the election  another party symbol

அப்போது, கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும், தேர்தலில், கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட,  சின்னமே பெரும்பங்காற்றுகிறது  என்றும் சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்..இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி  இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்று கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது..

other party members couldn't contest the election  another party symbol

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்பிகள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios