ops went to delhi to attend the nomination function
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜுலை மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து வரும் 17 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது,
இந்த தேர்தலில் பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் அனு தாக்கல் செய்யவுள்ளார், இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமீத் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில் , பா.ஜ., வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் , அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தற்போது டெல்லி செல்வதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
