ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தன்னை அப்பதவியில் இருந்து இறக்க முயற்சி செய்கிறார்கள் என கூறி தர்மயுத்தம் தொடங்கினார். அதனால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு கலைந்து போனது.

 

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் இணைந்து ஆட்சியைத் தொடர்ந்து வருகின்றனர்.

 

ஆனால் இந்த ஆட்சியில் ஓபிஎஸ்க்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று அவர் தரப்பினர் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடியை எப்படியாவது முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க ஓபிஎஸ் தரப்பு கடுமையாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய டி.டி.வி.தினகரன், கூவத்தூரில் சசிகலாவும் நானும் இருக்கும் வரை என்த பேரமும் நடக்கவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பது கருணாசுக்குத்தான் தெரியும் என தெரிவித்தார்.

 

ஓபிஎஸ் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு இபிஎஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு தான் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைகிறார்.

 

இப்போது கூட தனது ஆட்களை அனுப்பி தங்களோடு சேர்ந்தால் எடப்பாடியை ஆட்சியில் இருந்து இறக்கிவிலாம் என்று சொல்லி வருகிறார். ஓபிஎஸ்க்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்ததே நான்தான் என்னிடமே அவர் வேலைக் காட்டுகிறார் என தினகரன் தெரிவித்தார்.