Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி..! புலம்பும் நிர்வாகிகள்..!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ops team boycott...eps avoid
Author
Tamil Nadu, First Published Apr 6, 2019, 4:19 PM IST

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு பிரச்சாரம் செய்யாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ்  மற்றும் இ .பி.எஸ் இருவரும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் . இதில் இ .பி. எஸ் அவர்கள் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தருமபுரி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். ops team boycott...eps avoid

அப்போது கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி, மத்தூர் வழியாக வேலூர் மாவட்டம் சென்றார். முதல்வர் என்பதால் பிரச்சாரம் செய்யக் கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடுவதற்கு முன்னதாகவே காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. முதல்வர் வருவருவதால் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அதிமுக நிர்வாகிகளும் அவரை வரவேற்க திரண்டனர். ops team boycott...eps avoid

ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கே தகவல் இல்லையாம். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் முனுசாமி அவரது காரை பின் தொடர்ந்து திருப்பத்தூர் வரைக்கும் சென்று காரை வழிமறித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்த போது அதிமுக அணி இரண்டாக உடைந்த போது கே.பி.முனுசாமி அவர்கள் ஓ.பி.எஸ் அணியில் இருந்ததால் இ.பி. எஸ் அவருக்கு பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகிறார். மேலும் அவரது பிரச்சாரப்  பயண தகவலும் சொல்லவில்லை என்று கூறுகின்றனர்.

ops team boycott...eps avoid

என்ன தான் பெயருக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் இன்னும் கட்சிக்குள் அந்த இரு அணிகளும் இணையவில்லை. 
இதனால் தேர்தல் நேரத்தில் அதிகமாக கோஷ்டி பூசல் வருவதற்கு வாய்ப்பு அதிகமாகும் இந்த பூசல் மக்களவை மற்றும் இடைத்தேர்தலை எதிரொலிக்கும் என்பதால் கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios