ops team announced Governing Board of admk
அதிமுக ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டு இன்னும் இரண்டு தினங்கள் கூட கடக்காத நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் போட்டி ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

"ஜெயிலில் இருந்தாலும் லகானை கையில் வைத்திருக்கும் சசிகலா"
"அவர் கையெழுத்திடாமல் யாரும் வேட்பாளர் ஆக முடியாது"
என்ற தலைப்பில் கடந்த 11 ஆம் தேதி NEWSFAST தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
சரி விஷயத்திற்கு வருவோம். சசிகலா ஆட்சிமன்றக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ். எதிர்வினையாற்றாமல் இருக்கிறார் என்ற மீம்ஸ்சுகள் இணையத்தில் ரெக்கை கட்டிப் பறந்தன.

தன் மீதான விமர்சனங்களை சிக்ஸருக்குத் தூக்கி அடிப்பவர் தானே ஓ.பி.எஸ். தற்போது இவர் அடித்த பந்து ஒன்று டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கதவை தட்டியுள்ளது.
ஆம் சசிகலாவுக்கு போட்டியாக ஓ.பி.எஸ். அணி சார்பிலும் போட்டி ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவராக மதுசூதனன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ்.ஆட்சிமன்றக் குழு விவரம்
ஓ.பன்னீர்செல்வம்
பொன்னையன்
மைத்ரேயன்
செம்மலை
பாண்டியராஜன்
மனோரஞ்சிதம்
மாணிக்கம்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக கட்சியின் பெயரில் இரண்டு ஆட்சிமன்றக் குழு அறிவிக்கப்பட்டிருப்பதால் இவ்விவகாரம் தேர்தல் ஆணையத்திற்குச் செல்லும் என்றும், சசிகலா தரப்பில் அமைச்சர்களும், ஓ.பி.எஸ்.தரப்பில் எம்.எல்.ஏ.க்களும் ஆட்சி மன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளதால் அதிமுக கட்சியின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்கின்றனர் விவரமறிந்தவர்கள்..,.
