ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என முதலமைச்சர் ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என்றும் இதன்மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு காரணமே 2011-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தான் என்றும் அதற்கு உறுதுணையாய் இருந்த தி.மு.க. எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும், இந்த உண்மையை மறைக்‍க முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம், அக்கறை, தி.மு.க.விற்கு கிஞ்சித்தும் இல்லை என்று கூறியுள்ளார்- 

தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா - காவிரி நதிநீர் பிரச்சனை  என்றாலும், முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதைப் பாதுகாத்தவர் ஜெயலலிதா அவர் வழியில் செல்லும்  தமிழக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்யும் என்று ஓவிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதில் எள்ளளவும் பின்வாங்கப் போவதில்லை - தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக்காக்‍கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக ஓபிஎஸ் உறுதி படத் தெரிவித்துள்ளார்.