ops support mla s meeting
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏக்கள் மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோரஞ்சிதம், சின்ராஜ், மனோகரன், சரவணன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த கூட்டத்தில் கட்சி தலைமை,உயர்மட்டக்குழு சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்ட முயற்சி செய்வது குறித்து இன்று சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள 20 முக்கிய பிரச்சினைகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் விசாரணை கமிஷன் அமைக்கவும்,ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதி மறுத்தது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் வரும் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி இருப்பது மிக முக்கிய முன்னேற்றமாக கருதுவதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
நல்ல குடும்பமாக மீண்டும் மிளிர்வதற்கு நவயுக கட்சியாக மலர்வதற்கு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றததாகவும் இன்று முதல் ஓபிஎஸ் புதிய உத்வேகத்துடன் செயல்பட உள்ளதாகவும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனின் அதிமுக ஆட்சியின் ஊழல் தொடர்பாக கூறியுள்ள கருத்திற்கு வெளிப்படையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்வின் கொள்கை என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
