Ops speech at theun abour sasikala family

கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவை மறைமுகமாக இயக்கி வந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தந்த நெருக்கடியால் தான் தற்கொலை செய்ய முயன்றதாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவை எதிர்த்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு ,அதிமுகவிலிருந்து வெளியேறினார் ஓபிஎஸ். இதையடுத்து அக்கட்சி இரண்டாக உடைந்தது.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இதைனையடுத்து ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் இணைந்தனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், தற்போது தனி அணியாக பிரிந்து செய்லபட்டு வருகிறார்.

இந்நிலையில் தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மனம் திறந்து பல விஷயங்களை தெரிவித்தார். அது அனைத்தும் அதிர்ச்சி தரும் ரகங்களாகவே உள்ளன.

ஜெயலலிதாவிற்கு மிகவும் விசுவாசமாக இருந்ததால் சசிகலா குடும்பத்தினரால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டதாக ஓபிஎஸ்வ ருத்தத்துடன் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினா் தொடர்ந்து தனக்கு மிகவும் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் அதையெல்லாம் ஜெயலலிதாவுக்காக பொறுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.. என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் கட்சியை மறைமுகமாக இயக்கினர். ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினேன் என தெரிவித்த ஓபிஎஸ் . விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதா ,மரணம் குறித்து கருத்து கூற முடியாது. எனவும் கூறினார்.