கடந்த இரண்டு நாட்களாக தினகரனுக்கும் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நடந்த சந்துயப்பு குறித்து நடக்கும் பேட்டி போட்டியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியதை அடுத்து  இன்று காலை தினகரன் ஓபிஎஸ் உடனான சந்திப்பு குறித்து பகீர் தகவல்களை வெளியிட்டார். சந்திப்பு பொய் என பன்னீரால் மறுக்க முடியாது என கூறினார்.

இதனையடுத்து, கிரின்வேஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், த்னகரனை நான் சந்தித்தது உண்மைதான், ஆனால் நான் சந்திப்பதற்கு முன்பாக 200 முறைக்கு மேல் எனக்கு தொல்லை கொடுத்து என்னை சந்திக்க வைத்தனர்.தினகரன் அரசியலை விட்டு விலகுவதாக போய் சொல்லி என்னை சந்திக்க வைத்தனர் எனக் கூறினார்.

தொடர்ந்துப் பேசிய அவர், ஆயிரம் முறை என சந்திக்க கெஞ்சினார்கள். நான் இப்படி ஏதாவது வம்பு வரும் என நினைத்து தவிர்த்து வந்தேன்.   அவர் மனம் விட்டு என்னிடம் பேசவேண்டும் என சொன்னதால், மனம் திருந்தி நல்ல வார்த்தை பேசுவார் என நம்பி சென்றேன். இந்த சந்திப்பு கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி தினகரனுக்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் ஒருவர் வீட்டில் நான் தினகரனை சந்தித்தேன் எனக் கூறினார்.

அந்த சந்திப்பிற்கு பிறகுதான் எனக்கு தெரிந்தது அவர் முதல்வராகும் நோக்கத்தில் என்னை சந்தித்தார் என்று, இதனையடுத்து இவர்களின் யோக்கியதை தெரிந்த இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அந்த நண்பர் இன்று காலை என்னை சந்தித்து காலில் விழுந்து  மன்னிப்பு கேட்டார். மேலும் பேசிய அவர் நான் ஆதியை கவிழ்க்க அவரிடம் உதவி கேட்டதாக சொல்கிறாரே தினகரன், அரசின் அங்கமாக இருந்து கொண்டு நான் என் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என கூறினார்.