திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும், அவங்களால எப்பவுமே   ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

காலியாக அறிவிக்கப்பட்ட திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர்  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர் பேசிய அவர்; வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அதிமுக ஆட்சி காணாமல் போய் விடும், ஆட்சி கலைந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது என்று பேசினார். இதற்கு முன்னாடி தமிழகத்தை பல கட்சிகள் ஆட்சி செய்தது. ஆனால் யார் நல்லாட்சி தந்து, நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாது, யார் மக்களுக்கு தேவையான, பல்நோக்கு திட்டங்களை தந்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.

28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அதிமுக திகழ்கிறது. திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் திமுககாரர்களிடம் கேளுங்கள் என்று கிண்டலாக கூறினார்.

ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு, முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா? அது முடியவே முடியாது. ஏனென்றால் மக்கள்  திமுக மீது வெறுப்பில் உள்ளனர்.  அவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் பயங்கர கோபத்தில் உள்ளார்கள் எனக் கூறினார்.