OPS press meet

இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்….அடித்துக் சொல்லும் ஓபிஎஸ்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னம் சட்டப்பூர்வமாக எங்களுக்குத்தான் சொந்தம் எனவும் ஓபிஎஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், சசிசலா தலைமையில் ஓர் அணியும் உருவானது. சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார்.

ஓபிஎஸ் தரப்பினர், சார்பில் , அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. 

இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

ஆர்.கே. தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம், அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.