ஆர் கே நகர் தொகுதி இரட்டை விளக்கு மின் கம்பம் சின்ன வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக 39-வது வட்டத்தில் உள்ள நாகூரான் தோட்டத்தில் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரு குழந்தைகளுக்கு ஜெயராமன் மற்றும் ஜெயராமசந்திரன் என பெயர் சூட்டினார்.

இதையடுத்து அங்குள்ள அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ஓபிஎஸ் பிரச்சாரத்தின் போது வழி எங்கும் சாமந்தி, ரோஜா,சாமந்தி உதிரி பூக்களை தூவியும், ஆரத்தி எடுத்தும் தேங்காய் உடைத்தும்  பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆர் கே நகர் தொகுதியில் இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஒபிஎஸ் மற்றும் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோருக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது.