நாளை பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்… ஒரு வழியா நான்கு நாள் தவத்திற்குப் பிறகு இரக்கம் காட்டினார் மோடி…

ஷீரடி சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பிரதமரை சந்திக்க மீண்டும் டெல்லி செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமரை அவர் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

ஆனால் ஓபிஎஸ் டீமுக்கு மோடி சந்திக்க நேரம் வழங்கப்படாததால்  அதிர்ச்சியடைத் அவர்கள் டெல்லியில் இருந்து மும்பை சென்று, அங்கிருந்து ஷீரடி புறப்பட்ட அவர், சாய்பாபா கோயில் மற்றும் சனீஸ்வரர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, நாளை காலை 11 மணிக்கு பிரதமரை அவர் சந்திப்பார் எனவும், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.