ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அடுத்தவாரம் விசாரணை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா. பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையும் படிங்க;-  எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, திமுக கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சக்ரபாணி, தங்கத்தமிழ்ச் செல்வன் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் நீதிபதி சிக்ரி ஓய்வுப்பெற்றதை அடுத்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை குறித்து பல நேரம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமலே இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு திமுக சார்பில் முறையிட்டும் விசாரிக்கப்படவில்லை. 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... மணிப்பூர் எம்.எல்.ஏ. வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சபாநாயகருக்கு நெருக்கடி?

இந்நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில்சில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே சந்தித்து வலியுறுத்தினார். மேலும், சபாநாயகர் வழங்கும் கால அவகாசம் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி தீர்ப்பை சுட்டிக்காட்டி, எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.