சசிகலாவை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? ஒரே வரியில் பதில் சொன்ன MP ரவீந்திரநாத்..!

ஓ.பன்னீர் செல்வம் இதுவரை எப்போதும் சசிகலாவை ஆதரிக்க மாட்டேன் என சொன்னதில்லை. எங்களிடம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என ஓபிஎஸ் கூறியுள்ளார். எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவின் தலைமையை ஏற்கலாம் என ஓபிஎஸ் கூறிவிட்டார். 

OPS meeting Sasikala? MP Ravindhranath replied in one line

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை யாராலும் ஒரங்கட்ட முடியாது என தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. எதிர்வரும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், அதற்கு ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பொதுச்செயலாளரை நியமிப்பது  ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்று கூறியிருந்தார். தற்போது அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவுவதால் பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனர். திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும், கண்டிப்பாக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்து கொள்வார் என்று இபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

OPS meeting Sasikala? MP Ravindhranath replied in one line

இது ஒருபுறம் உள்ள நிலையில் சசிகலாவின் ஆதரவாளரும் அதிமுகவின் முன்னாள் தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ஆவின் வைத்தியநாதன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியநாதன்;- ஓ.பன்னீர் செல்வம் இதுவரை எப்போதும் சசிகலாவை ஆதரிக்க மாட்டேன் என சொன்னதில்லை. எங்களிடம் சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

OPS meeting Sasikala? MP Ravindhranath replied in one line

எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவின் தலைமையை ஏற்கலாம் என ஓபிஎஸ் கூறிவிட்டார். தேவைப்பட்டால் சசிகலாவை கண்டிப்பாக ஓபிஎஸ் சந்திப்பார். சசிகலா விரும்பினால் ஓபிஎஸ்சுடன் அவரையும் சேர்த்து பொது குழுவிற்கு அழைத்துச் செல்வோம் என கூறி தமிழக அரசியல் களத்தை அதிரவிட்டார். இதுதொடர்பாக ஓபிஎஸ் மகனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

OPS meeting Sasikala? MP Ravindhranath replied in one line

இந்நிலையில், ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, எனது தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான். அன்றைக்கு நடந்த ஆலோசனையின்போது தான் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் கோரிக்கைகளை எடுத்து சொன்னேன். 

OPS meeting Sasikala? MP Ravindhranath replied in one line

இதை அரசியல் ஆக்குவது எந்தவகையில் நியாயம். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துளளார். மேலும், சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார் என்பது அது தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை யாராலும் ஒரங்கட்ட முடியாது. பொதுக்குழு நடக்குமா? நடக்காததா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சபரீசனை ரகசிய சந்தித்ததாக கூறுவது வதந்தி என ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- வெயிட் அண்ட் சீ.. நாளை மறுநாள் எங்களுக்கு எத்தனை மாவட்ட செயலாளர் ஆதரவு பாருங்க.. டுவிஸ்ட் வைத்து OPS குரூப்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios